திருவிழாக்கள்

எங்கள் ஊரில் அனைத்து விழாக்களையும் சீறும் சிறப்புமாக கொண்டாடிவருகிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பாரம்பரியமிக்க பண்டிகைகளுடன் விநாயகர் சதுர்த்தி, தசரா, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, மஹா சிவராத்திரி, கார்த்திகை தீபம், தைப்பூசம் போன்ற கோவில் பண்டிகைகளையும், உள்ளூர் கோவில் பண்டிகைகளான தர்மராஜர் கோவில் திருவிழா, குலதெய்வமான சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா, கெங்கையம்மன் கோவில் திருவிழா, மாரியம்மன் கோவில் திருவிழா, ஐயப்பன் கோவில் திருவிழா போன்ற கோவில் திருவிழாக்களையும் தொன்றுதொட்டு கொண்டாடிவருகிறோம். ஒவ்வொரு விழாக்களையும் ஒவ்வொரு விதமாக அதாவது தர்மராஜர் கோவில் திருவிழாவை தீ மிதித்தும், மாஹாபாரத சொற்பொழிவாற்றியும், மஹாபாரத நாடகம் நடத்தியும், துரியோதனன் படுகளத்துடனும் நடத்தி வருகிறோம். அதேபோல் குலதெய்வமான சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவையும் எழு நாட்கள் ஆற்றிலோ அல்லது குளத்திலோ நீராடியும் பின் கை புஜங்களிளும், மார்பகங்களிலும் கத்தி போட்டு அம்மனை வேண்டி தீ மிதிப்போம். அதேபோல் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் வார்த்தும், கெங்கையம்மன் கோவிலுக்கு மாறுவேடமிட்டும், சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டம் ஆடியும் அம்மன் அருள் பெறுவோம். இவ்வாறாக பல பண்டிகைகளை கொண்டாடியும் பல கோவில் திருவிழாக்களை விமரிசையாகக் கொண்டாடியும் கடவுளரின் அருள் பெற்று சிறப்பாக வாழ்ந்து வருகிறோம்.

சிலம்பாட்டம்

தீமிதி திருவிழா

துரியோதனன் படுகளம்