இளைய தலைமுறை

ஒண்ணுபுரத்தில் இக்காலத்தில் வாழும் இளைஞர்கள் சிறப்பாக படித்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். என் அழகிய கிராமத்தின் இளைஞர்கள் மென்பொருள் துறை, நெசவியல் துறை, அரசாங்கத்துறை, இராணுவம், மருத்துவத்துறை, ஆட்டோமொபைல் துறை, கெமிக்கல் சார்ந்த துறைகள், எலக்ட்ரானிக் மற்றும் கம்ம்யூனிகேஷன் பிரிவு, கட்டுமானத்துறை போன்ற துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். அதுமட்டுமின்றி என் கிராமத்தின் குலத்தொழிலாம் நெசவுத்தொழிலிலும் ஈடுபட்டு அது அழியாவண்ணம் காக்கின்றனர். இவ்வாறாக என் கிராமத்தின் இன்றய தலைமுறையினர் எம் குலத்தொழிலையும் மற்ற துறை சார்ந்த தொழில்களையும் செய்து வீட்டிற்கும் எனது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கின்றனர். இப்பொழுது என் கிராமத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இன்றய நவீன உலகின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஏனெனில் நங்கள் இப்பொழுது இந்த நவீன உலகில் மூழ்கியுள்ளோமே தவிர எங்கள் இளவயதில் பலதரப்பட்ட விளையாட்டுகளான பம்பரம், கோலி, பில், ஐஸ் நம்பர், பட்சா, கிளிகோடு, வாலி பால், கிரிக்கெட் போன்ற இன்னும் பலதரப்பட்ட விளையாட்டுகளையும், ஆற்றில் மீன் பிடித்தல், மரம் ஏறி பழம் பறித்தல், கிணற்றில் நீச்சல் அடித்தல் போன்ற பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டோம். அப்பொழுது வீட்டில் இருந்து ஒரு ருபாய் வாங்குவதே இன்று நூறு ருபாய் வாங்குவதற்கு சமமாக இருந்தது. அந்த வயதில் வீட்டில் லேண்ட்லைன் போன் இருப்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இன்றோ பிறந்த குழந்தைகளும் செல் போன் பயன்படுத்த தொடங்கி விடுவதை பார்க்கும் பொழுது இந்த நாகரீக வளர்ச்சியானது எங்கள் விளையாட்டுகளை அழித்ததை உணர முடிகிறது. இப்பொழுது இருக்கும் இளவயது பிள்ளைகளும் வருங்காலங்களில் பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் நவீன உலகில் மூழ்கி இருப்பதையும், மூழ்கவிருப்பதையும் எண்ணி மனம் வருந்துகிறது. ஆனாலும் காலத்திற்கேற்ப நம்மை இந்த நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதும் கட்டாயமாகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

Regan McCook

Founder & CEO

Include a short bio with an interesting fact about the person.

Eric Teagan

Vice President

Include a short bio with an interesting fact about the person.

Timothy Barrett

CFO

Include a short bio with an interesting fact about the person.

Next Steps...

This is should be a prospective customer's number one call to action, e.g., requesting a quote or perusing your product catalog.